Wednesday, June 28, 2023

NO NEED OF UNIFORM CIVIL CODE FOR SOME OF THE FOLLOWING MAIN REASONS

 

NO NEED OF UNIFORM CIVIL CODE
FOR SOME OF THE FOLLOWING MAIN REASONS

1. Article 25 Guarantees Right to Freedom of Religious Practice, so practicing personal laws cannot be interferred even by the State.
2. UCC is against the Spirit of the Secular Character of our Constitution.
3. Indian Legal System is based on pluralism and the application of UCC will result in its complete destruction.
4. The Parliamentary System of India itself is in the model of Unity in Diversity. So, UCC cannot exist in parallel.
5. The Supreme Court of India has time and again upheld the Constitutional Validity of Personal Laws over UCC.

Tuesday, December 2, 2014

தொழுகை &பள்ளிவாசல் சம்பந்தமான கேள்வி பதில் 1

தொழுகை &பள்ளிவாசல் சம்பந்தமான கேள்வி பதில் 1

1.       கே: தொழுகை எப்போது கடமையாக்கப்பட்டது?
ப: ஹிஜ்ரத்துக்கு பின்

2.       கே: நபி (ஸல்) எந்த நகரத்தில் வசிக்கும்போது தொழுகை கடமையாக்கப் பட்டது?
ப:  மக்கா

3.       கே: தொழுகை ஆரம்பத்தில் ஒவ்வொரு நேரமும் எத்தனை ரகஅதுகளாக கடமையாக்கப்பட்டது?
ப: இரண்டிரண்டு ரகஅதுகளாக

4.       கே: நபி (ஸல்) அவர்களிடம் ஐந்து நேர தொழுகையாக குறைத்து வரும்படி ஆலோசனை கூறியது யார்?

ப: மூஸா  (அலை)

5.       கே: நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் தொழுகை கடமையாக்கப்பட்டது?

ப:  ஐம்பத்திரண்டு

6.       கே: நபி (ஸல்) தங்கள் சுயதேவைக்காக சென்றிருந்த சமயம் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட வேறொரு சஹாபி தொழவைத்தார் தாமதமாக வந்த நபி (ஸல்) அவரைப்பின்பற்றி தொழுதார்கள் அந்த சஹாபி யார்?
ப: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

7.   கே: மதீனா வாசிகளுக்கு முதல்முதலாக தொழவைத்தவர் யார்?

ப:  முஸ்அப் பின் உமைர் (ரலி) 

8.    கே: ஹிஜ்ரத்துக்கு முன் மக்காவில் இருக்கும் சமயம் முஸ்லிம்கள் எதை முன்னோக்கி தொழுதனர்?
ப:  மஸ்ஜித் அக்ஸா & கஃபத்துல்லா இரண்டையும் முன்னோக்கும் விதமாக

9.     கே: எந்த மூன்றை (சந்திப்பது)  ஜியாரத் செய்வதற்காக பயணம் செய்வது கூடும் என ஹதீஸில் வந்துள்ளது?
ப: அ) கஃபா, மஸ்ஜிது நபவி, மஸ்ஜித் அக்ஸா 

10.    கே: மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் ஆரம்பத்தில்  முஸ்லிம்கள் எதை முன்னோக்கி தொழுதனர்?
ப:  மஸ்ஜித் அக்ஸா

11.    கே: கஃபத்துல்லா எப்போது முஸ்லிம்களின் கிப்லாவாக மாற்றப்பட்டது?
ப:  ஹிஜ்ரத்திற்கு 16,17 மாதங்களுக்கு பின்னால்

12.    கே: எந்த நேரத் தொழுகையின் போது கிப்லா மாற்றப்பட்டது?
ப:  லுஹர் தொழுகை 


13.    கே: எந்த பள்ளிவாசலில் தொழும்போது கிப்லா மாற்றப்பட்டது?
ப:  மஸ்ஜித் கிப்லதைன்

14.    கே: நபி (ஸல்) மிஃராஜ் செல்லும்போது அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக தொழவைத்த பள்ளிவாசல் எது?
ப;  மஸ்ஜித் அக்ஸா

15.    கே: எந்த பள்ளிவாசல் பற்றி (தக்வா) அல்லாஹ்வின் அச்சத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது என குர்ஆன் கூறுகிறது?
ப:  மஸ்ஜித் குபா

16.    கே: அல்லாஹுதஆலா நபி (ஸல்) அவர்களை எந்த பள்ளிவாசலில் நீங்கள் எப்போதுமே நின்று தொழவேண்டாம் என குர்ஆனில் கூறியுள்ளான்?
ப:  மஸ்ஜித் ளிரார்

17.    கே: எந்த பள்ளிவாசலில் தொழுதால் உம்ராவுடைய நன்மை கிடைக்கும் என ஹதீஸில் வந்துள்ளது?
ப:  மஸ்ஜித் குபா

18.    கே: எந்த பள்ளிவாசலின் சுற்று வட்டாரங்கள் (பரகத்) அருள் நிறைந்தது என  குர்ஆனில் கூறப்பட்டுள்ளது?
ப:  மஸ்ஜித் அக்ஸா

19.    கே: மஸ்ஜிதுல் ஹரம் (கஃபத்துல்லா) கட்டப்பட்டதிற்கும் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டதிற்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி உள்ளதாக ஹதீஸில் வந்துள்ளது?
ப:  40 ஆண்டுகள்

20.    கே: மஸ்ஜித் அக்ஸாவை முதல்முதலில் கட்டியது யார்?
ப:  நபி ஆதம்(அலை) 

Wednesday, November 26, 2014

ரஷாதீ வலை தளம்: இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில்

ரஷாதீ வலை தளம்: இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில்: சஹாபாக்கள் பற்றிய அறிய தகவல்கள் 1 1.      கே: சஹாபாக்களில் . யாருடைய மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?     ப:   ஸஃ...

இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில்

சஹாபாக்கள் பற்றிய அறிய தகவல்கள் 1


1.     கே: சஹாபாக்களில் . யாருடைய மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?

    ப:  ஸஃது இப்னு மஆத் (ரலி)

2.     கே: நாயகத்தின் ஹவாரிய்யூன்கள்(மார்க்க உதவியாளர்கள்) என்னும் தோழர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டவர் யார்?

    ப:  அஸ்ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி)

3.     கே: பெருமானார் (ஸல்) காலத்தில் இருபது வயதிற்கும் குறைவான இளைஞர் ஒருவர் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார் அவர் யார்?                                        
      
    ப:  உஸாமா பின் ஜைது (ரலி)

4.       கே:  உஹது யுத்தத்தில் இரு கைகளும் சல்லடையாக துளைக்கப்படும் அளவு காயம் அடைந்த சஹாபி யார்?                                                            

         ப:  தல்ஹா பின் உபைதுல்லா (ரலி)

5.     கே: இஸ்லாத்தில் (போர்க்களத்தில்) முதல்முதலில் அம்பு எய்து சண்டையிட்ட சஹாபி யார்?

          ப:  ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி)

6.       கே: சஹாபாக்களில் யாரைப்பற்றி (ஸாலிஹான) நல்ல மனிதர் என நபி (ஸல்) புகழ்ந்து கூறியுள்ளார்கள்?

           ப:  அப்துல்லா பின் உமர் (ரலி)

7.     கே: சஹாபாக்களில் ஹலால் (ஆகுமானவை) ஹராம் (ஆகாதவை) பற்றி அதிகம் அறிந்திருந்தவர் யார்?

    ப:   முஆத் பின் ஜபல் (ரலி)

8.       கே:  சஹாபாக்களில் அழகிய முறையில் குர்ஆன் ஓதக்கூடியவர் யார்?

    ப:  உபை இப்னு கஃபு (ரலி)

9.     கே:  இந்த சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீனுல் உம்மத்) என புகழப்பட்ட சஹாபி யார்?

    ப:  அபூ உபைதா (ஆமிர் பின் ஜர்ராஹ் (ரலி)

10.    கே:  கிஸ்ராவின் முத்து பதித்த காப்புகள் கிடைக்கும் என எந்த  சஹாபிக்கு நபி (ஸல்) சுபச்செய்தி கூறினார்கள்?

    ப:   ஸுராக்கா  பின் மாலிக் (ரலி)

11.  கே:  சுவனத்தில் எந்த சஹாபியின் கிராஅத் (குர்ஆன்) ஓதுதலை நபி (ஸல்) கேட்டார்கள்?

        ப:  ஹாரிஸா பின் நுஃமான் (ரலி)

12.  கே:  ஹிஜ்ரத்துக்கு பின்னால் பிறந்த முதல் குழந்தையான சஹாபி யார்?

   ப:  அப்துல்லா பின் ஜுபைர் (ரலி)

13.  கே: கஃபாவின் உள்ளே (கட்டிடத்தின் உள்பகுதியில்) பிறந்த குழந்தையான சஹாபி யார்?

   ப:  ஹகீம் பின் ஹிஜாம் (ரலி)

14.  கே: இஸ்லாத்தில் மூன்று முறை நடைபெற்ற அனைத்து ஹிஜ்ரத்திலும் பங்கு பெற்ற சஹாபி யார்?

   ப:  அபூமூஸா அஷ்அரி (ரலி)

15.  கே: இஸ்லாத்தில் முதல்முதலாக பிறந்த குழந்தையான சஹாபி யார்?

   ப:  அப்துல்லா பின் உமர் (ரலி)

16.  கே: இஸ்லாத்தில் போர்களத்தில் முதல்முதலில் ஷஹீதான (வீரமரணம் அடைந்த) சஹாபி யார்?

   ப:  உபைதுல்லா பின் ஹாரிஸ் (ரலி)

17.  கே: இந்த சமுதாயத்தில் (ஹிப்ருல் உம்மத்) நுண்ணறிவு மிக்கவர் என புகழப்பட்ட சஹாபி யார்?

   ப:  அ) அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி)

18.  கே: இஸ்லாத்தில் முதல்முதலில் குர்ஆனை சப்தமிட்டு பகிரங்கமாக ஓதிய சஹாபி யார்?

   ப:  அப்துல்லா பின் மஸ்வூத் (ரலி)

19.  கே: இஸ்லாத்தில் முதல்முதலில் ஜன்னத்துல் பகீஃஉ கபரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட சஹாபி யார்?

   ப:  அஸ்அத் பின் ஜராரா (ரலி)


20.  கே: நபி (ஸல்) அவர்கள் யூதர்களின் சுர்யானி மொழியை கற்றுக்கொள்ளும்படி எந்த சஹாபி இடம் கூறினார்கள்?

   ப:  ஜைது பின் ஸாபித் (ரலி)

Friday, July 15, 2011

பராஅத் ஓர் ஆய்வு

சுன்னத்தும் பித்அத்தும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

குர்ஆன் ஹதீஸைப் போல முஸ்லிம்களின் அதிக கவனத்திற்குரிய வேறு இரு சொற்கள், சுன்னத் பித்அத்

துரதிஷ்டவசமாக தற்கால முஸ்லிம்கள் இவற்றின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளததால் ஏகப்பட்ட பிரச்சினைகளும் பிளவுகளும் தோன்றின.

இன்றைய இளைய முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் பித்அத் என்ற வார்த்தையின் சரியான பொருளை புரிந்து கொள்ளாமலே சமுதாயத்தை பிளவு படுத்திக் கொண்டிருக்கினறனர் .

தீன் என்ற பெயரில் தீனின் அடிப்படைகளுக்கும் தெளிவுகளுக்கும் மாற்றமாக வறட்டு சித்தாந்தத்தில் உலவிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப்பிரச்சினைக்கு, பிற்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களாக புகழப்பட்ட இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் ஆகிய இருவரின் தவறான அபிப்பிராயங்களே முக்கிய காரணமாகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் ஷிர்க் சாயம் பூசி தங்களை மட்டுமே உண்மையான முஸ்லிம்களாக காட்டிக் கொள்ள முயலும் இன்றைய சவூதி அரசாங்கத்தின் பரப்புரைகளும் ஒரு பெரும் காரணமாகும்.

சுன்னத் ஹதீஸ் அறிஞர்களிடம் :
ما نقل عن النبي صل الله عليه وسلم قولا، وفعلا, وإقرارا

சுன்னத் சட்ட அறிஞர்களிடம்
ما واظب النبي صل الله عليه وسلم بتركه احيانا

பெரும்பாலான சமயங்களில் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட வழி முறை என்பதே சுன்னத் என்பதின் பொருளாகும். சில சமயங்களில் அதை தவிர்த்தும் இருப்பார்கள்.

சுன்னத்கள் பின்பற்றப் படனும் – இஸ்லாமின் அடிப்படைகளை முழுமைப் படுத்துபவை சுன்னத்துகளே. சுன்னத்துக்கள் இல்லாத இஸ்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. உயிரில்லாத உடல் போன்றது. அல்லது உடலில்லாத உயிர் போன்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ(20) الانفال
مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا(80) النساء
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِيهِ فَأُوْلَئِكَ هُمْ الْفَائِزُونَ(52) النور
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا(17) الفتح

சாப்பிட்ட பிறகு விரல் சூப்புவதிலிருந்து அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களிடமிருந்து அன்பளிப்புக்களை ஏற்கக் கூடாது என்பது வரை வாழ்க்கைப்பாதையின் வழி நெடுகிலும் தனித்துவமிக்க தனது வழி முறைகளை விட்டுச் சென்ற பெருமை பெருமானாரைப் போல வேறெவருக்கும் இல்லை.

குடும்பம், சமூகம், அரசியல், ஆன்மீகம் பொருளாதாரம் என அனைத்து துறையிலும் பெருமானாராது வழிமுறைகள் உண்டு.

சுன்னத் தானே என்ற அலட்சியம் கூடாது.
பர்ளை நிறைவேற்றாவிட்டால் அல்லாஹ் பிடிப்பான். சுன்னத்தை விட்டால் பிரச்சினை இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.

இந்த எண்ணம் தவறு. சுன்னத் கடமை அல்ல என்றாலும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றே.

சுன்னத்தை கடைபிடிக்கிற போதுதான் பெருமானாரின் ஷபாஅத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சுன்னத் என்பது பெருமானாரின் வழி முறை மட்டுமல்ல நபித்தோழர்களது வழி முறைகளும் சேர்ந்ததாகும்.

عن عِرْبَاضَ بْنَ سَارِيَةَ : وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ

சுன்னத்துக்களை பின்பற்றுவதில் சஹாபாக்களின் ஆர்வம் -

உதாரணம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ

عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ انْتَهَى إِلَى الْجَمْرَةِ الْكُبْرَى جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ وَرَمَى بِسَبْعٍ وَقَالَ هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طَوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَعَلَهُ

كَانَ ابْنُ عُمَرَ لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ لَا يُصَلِّي قَبْلَهَا وَلَا بَعْدَهَا فَقِيلَ لَهُ مَا هَذَا قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُوتِرُ عَلَى بَعِيرِهِ وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ

أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَصْبُغُ ثِيَابَهُ بِالزَّعْفَرَانِ فَقِيلَ لَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ – النسائي

சுன்னத்துக்களை தனி கவனத்தோடு பின்பற்றுகிற காலமெல்லாம் சமுதாயம் உன்னதமான இடத்தில் இருந்தது. இருக்கும். வழி தவறாது.

சுன்னத்துக்களை கடைபிடிக்கிற அதே நேரத்தில் பித்அத்கள் தவிர்க்கப் பட வேண்டும்

عن عائشة - رضي الله عنها - عن النبي - صلى الله عليه وسلم - قال: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد)) صحيح البخاري 4273

كان رسول الله - صلى الله عليه وسلم- يخطب الناس؛ يحمد الله، ويثني عليه بما هو أهله؛ ثم يقول: ((من يهده الله فلا مضل له، ومن يضلل الله فلا هادي له، وخير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة)) صحيح مسلم 867 ، وفي رواية للنسائي: ((وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار)) ،

பித்அத் என்றால் என்ன?

தற்காலத்தில் இது பற்றி முறையாக விளங்காமலே பல சுன்னத்துக்களை பித் அத் என்று சிலர் பேசி வருகிறார்கள்.

எதையாவது புதிதாக சொல்லி தங்கள பக்கம் மக்களை ஈர்க்க நினைக்கும் தீய தலைவர்களின் கைங்கர்யம் இது.

இத்தகையோர் பித்அத் என்பதற்கு பெருமானார் காலத்தில் இல்லாதது என்று பொத்தம் பொதுவாக கூறுவர்.


இது இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் போன்ற பிந்தய நவீனத்துவ சிந்தனையாளர்களின் சுய கருத்தும் விளக்கமுமாகும்,

"البدعة في الدين هي ما لم يشرعه الله ورسوله، وهو ما لم يأمر به أمر إيجاب ولا استحباب - ابن تيمية- مجموع الفتاوى 4/108

இந்த விளக்கம் நல்லது போல தோன்றினாலும் சரியானது அல்ல. ஆபத்தானது. சஹாபாக்களை ஒரு புறத்திலும் பெருமானாரை மறு புறத்திலும் நிறுத்தக் கூடியது.

இந்த விளக்கத்தின் காரணமாக நேர்வழி பெற்ற கலீபாக்களான உமர் உஸ்மான் (ரலி) ஆகியோரும் மற்ற பல சஹாபாக்களும் பெருமானாரிடமிருந்து புரிந்து கொண்டதன் அடிப்படையில் செய்த காரியங்களை பித் அத்தாக கண்டனர் (நவூது பில்லாஹ்)

உதாரணத்திற்கு ஜும் ஆவில் இரண்டு பாங்கு நடைமுறை. குர்ஆனை தொகுத்தது, ரமலான் முழுவதும் தராவீஹ் ஜமாத்.

பித் அத்தின் சரியான விளக்கம் : முன்னோடி மார்க்க விற்பன்னர்களின் கருத்து
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி – புகாரி விரிவுரையாளர்.

البدعة ;ما أحدث وليس له أصل في الشرع - الحافظ ابن حجر - فتح الباري
البدعة : "ما أحدث مما لا أصل له في الشريعة يدل عليه"- ابن رجب الحنبلي

இந்த விளக்கமே மார்க்கத்தையும் மார்க்க முன்னோடிகளையும் சரியாக புரிந்து கொள்ள உதவக்கூடியது.

பராஅத் இரவு
பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றனர், அது சத்தியத்தை மூடி மறைக்கும் பிதற்றலாகும்.

அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ்அரி, போன்ற பல சஹாபாக்களின் அறிவுப்புக்களில் பராஅத் என்ற சஃபான் 15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில் باب ما جاء في ليلة النصف من شعبان என்ற தலைப்புக்கள் போடப்பட்டு அதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,

இப்படி ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித்அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவு துணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்

பராஅத் இரவு விசயத்தில் ஹதீஸ்களே இல்லை என்றால், அல்லது அத்தலைப்புக்களில் உள்ள ஹதீஸ்கள் மவ்ளுஃ இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தால் அல்லவா அதை மறுக்க முயற்சிசெய்யலாம்.

பராஅத் விசயத்தில் எதார்த்ததை ஒத்துக் கொள்ள மனமின்றி தமது சொந்த விருப்பத்தின் பின்னணியில் தேவையற்று வலிந்து வளைந்தும் வளைத்தும் சவூதி அறிஞர்கள் செய்யும் பகீரத முயற்சியை நியாயமாக யோசிக்கிற எவராலும் புரிந்து கொள்ளமுடியும்.

அரசாங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு ஆடம்பரத்தில் மிதக்கும் மன்னர்களுக்காக தொழுகையில் துஆ செய்வதை பராஅத்தை பித்அத் என்று கூறும் அதே பின்னணியில் இவர்கள் யோசிப்பதுண்டா?

சுமார் பத்து சஹாபாக்கள் அறிவிக்கிற ஒரு செய்தியை மறைத்து விட்டு, ஹதீஸ்களை அறிஞர்களின் தீர்ப்புக்களை ஒதுக்கி விட்டு தங்களது சுய விருப்பத்திற்கேற்ப மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க முயல்கிற தான் தோன்றிகளை புறக்கணிப்பீர்.

வருகிற 17 ம் தேதி இரவில் பள்ளிவாசல்களில் நடைபெறுகிற பரா அதி நிகழ்ச்சி களில் பங்கேற்பீர். முறையான அமல்களைச் செய்வீர்.

பராஅத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்ல. இதற்கு மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்.

பரா அத் பற்றிய நபி மொழிகள்:
ابن ماجة
عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144


عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

عن عائشة قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب

عن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن

البيهقي

عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك-- ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل-- ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر



நன்றி; வெள்ளிமேடை பிளாக் ஸ்பாட்

Tuesday, April 26, 2011

கோடை சிந்தனை...


காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!
கோடைகாலம் ஆரம்பமாகிவிட்டது கோடையின் கொளுத்தும் வெயிலை விட்டும் குறிப்பாக கத்தரி வெயிலை விட்டும் நம்மைக் காத்துக்கொல்வதற்காக மருத்துவர்கள் மற்றும் சமுதாய ஆர்வளர்கள்,அனுபவ சாலிகள் பலவிதமான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் அவ்வப்போது பத்திரிக்கைகள்,வானொலி,தொ[ல்]லைக்காட்சி போன்றவற்றில் கூறிக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை கோடை வெயிலின் கோரப்பிடியிலிருந்தும், விடுமுறைக் காலங்களில் வீணாக சுற்றிதிரிவதிலிருந்தும் காப்பாற்றும் நிலையில் விடுமுறையும் பிள்ளைகளுக்கு பிரயோஜனமாக கழிவதற்காக கம்யூட்டர்,டைப்ரைட்டிங்,தையல் போன்ற உபரியான கல்விகளைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கின்றனர். இது பிள்ளைகளின் நேரங்களையும்,அவர்களின் ஒழுங்கு முறை நடவடிக்கைகளையும் பாதுகாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதே நேரத்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் இவ்வுலக வெயிலின் வெப்பத்திலிருந்து தம் பிள்ளைகளை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்திவிடாமல் தாம் கொண்டுள்ள ஈமானின் அடிப்படையில் மறுஉலக வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் குறிப்பாக மிகப்பெரும் நரக நெருப்பின் படுபயங்கரமான வெப்பத்தை விட்டும் அதன் தண்டனையை விட்டும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை மறந்து விடக்கூடாது.
அதனை நினைவூட்டும் விதமாக அல்லாஹுதஆலா தன் திருமறையில்
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6)
 "ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் [குடும்பத்தினர்] மனைவி,மக்கள்,மற்றும் உங்களுக்கு கீழ் உள்ளவர்களையும் நரகநெருப்பை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதர்களும், கற்களுமாகும். {அதில் வேதனை செய்வதற்காக}இரக்கமற்ற இருகிய மனம் கொண்ட வலிமைமிக்க வானவர்கள் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளார்கள். இறைவன் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளதற்கு மாறு செய்யமாட்டார்கள்,அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவை உடனடியாக செய்துமுடிப்பர்கள்.{அவர்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும்,அரட்டுதலுக்கும் அசைய மாட்டார்கள்,காசு பணத்திற்கும்,கையூடிற்கும் மசிய மாட்டார்கள்.
[அல்குர்ஆன்:]
சிந்தனை;
இவ்வுலக நெருப்பின் பிரதிபலிப்பை போன்ற வெயிலின் உக்கிர வெப்பத்தையே நம்மால் தங்கிக்கொள்ள முடியவில்லை இவ்வுலக நெருப்பைவிட பன்மடங்கு அதிகமுள்ள நரக நெருப்பை நம்மால் எவ்வாறு தங்கமுடியும் எனவே அதிலிருந்து தப்பிக்கும் படி கூறிய அல்லாஹ் அதன் பயங்கரத்தையும் சிறுது எடுத்துக் கூறி எச்சரிக்கிறான் மேற்கூறிய வசனத்தின் தொடரில் "அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களும் ஆகும்" எனக்கூறி நரகில் மனித உடல்களால் எரிக்கப்படும் நரக நெருப்பு ஒரு பக்கம் துர்வாடையும்,உடல்கள் வேகுவதினால் வெளியேறும் சீல்சலங்களும் நிறைந்த அருவெறுப்பான நிலையையும், மற்றொரு பக்கம் கற்களால் எரிக்கப்படுவதால் கரைந்து சாம்பலாக வழியின்றி சதாவும் கனன்றுகொண்டே கொண்டே இருக்கும் வெப்பத்தாலும் ஆன வேதனை அங்கு ஏற்படும் என்பதைக்கூறி இப்படிப்பட்ட வேதனையை உங்களால் ஒரு போதும் தங்கிக்கொள்ள முடியாது எனவே அதை விட்டும் தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அவைகளை முழுமையாக கடைபிடிக்க முயற்சியுங்கள் என மிக்க கருணையுடன் கட்டளை பிரப்பிக்கின்றான்.
காக்கும் வழி?
இவ்வசனம் இறங்கியதும் சஹாபாக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது ஒவ்வொருவரும் அல்லாஹ்வை அஞ்சி அவனது கட்டளைகளை நிறைவேற்றியும்,அவனது விலக்கல்களை தவிர்ந்து கொள்வது கொண்டுமே நரகை விட்டும் தப்பிக்க முடியும் இதை நாம் செய்து விடலாம் ஆனால் நம் மனைவி மக்களை எப்படி நம்மால் காப்பாற்ற முடியும் என்பது புரியவில்லையே என்று நினைத்து அதற்கான விளக்கத்தை நபி[ஸல்]அவர்களிடமே கேட்டுத்தெரிந்து கொள்ள முற்பட்டார்கள்.
قوله : { يأَيُّهَا الذين ءامَنُواْ قُواْ أَنفُسَكُمْ } بفعل ما أمركم به ، وترك ما نهاكم عنه { وَأَهْلِيكُمْ } بأمرهم بطاعة الله ، ونهيهم عن معاصيه { نَاراً وَقُودُهَا الناس والحجارة } أي ناراً عظيمة تتوقد بالناس وبالحجارة كما يتوقد غيرها بالحطب ، وقد تقدّم بيان هذا في سورة البقرة . قال مقاتل بن سليمان : المعنى : قوا أنفسكم وأهليكم بالأدب الصالح النار في الآخرة . وقال قتادة ، ومجاهد : قوا أنفسكم بأفعالكم ، وقوا أهليكم بوصيتكم . قال ابن جرير : فعلينا أن نعلم أولادنا الدين والخير ، وما لا يستغنى عنه من الأدب ، ومن هذا قوله : { وَأْمُرْ أَهْلَكَ بالصلاة واصطبر عَلَيْهَا } [ طه : 132 ] وقوله : { وَأَنذِرْ عَشِيرَتَكَ الأقربين } [ الشعراء : 224 ](فتح القدير:7/257)
ஹழ்ரத் உமர்{ரலி}அவர்கள் நபி{ஸல்}அவர்களிடம் வந்து யாராசூலல்லாஹ்! நாங்கள் [பாவங்களை விட்டும் தவிர்ந்து இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதின் மூலம்]எங்களை நரகை விட்டும் பாதுகாத்துக்கொள்ளும் வழியை அறிந்துள்ளோம், ஆனால் எங்களின் மனைவி,மக்களை எவ்வாறு நரகை விட்டும் காப்பாற்றும் வழி தெரியவில்லையே என கேட்க அதற்கு நபி[ஸல்] அவர்கள்; அல்லாஹுதஆலா உங்களை எவைகளைச் செய்யும்படி கட்டளையிட்டுள்ளானோ அவைகளைச் செய்யும்படி உங்கள் குடும்பத்தினரையும் ஏவுங்கள். அவன் எவற்றைச் செய்ய வேண்டாம் என உங்களைத் தடுத்துள்ளானோ அவைகளை உங்கள் குடும்பத்தினரும் செய்ய வேண்டாம் என தடுத்து விடுங்கள்.இதுவே நீங்கள் அவர்களை நரகை விட்டும் காக்கும் வழியாகும் என கூறினார்கள்.           {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}

குடும்பத்தினர் மீது அக்கறை:
இந்த வசனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தன் மனைவி,மக்களுக்கு ஷரீஅத்தில் கடமையாக்கப்பட்ட விஷயங்கள்,[ஹலால்] ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள், [ஹராம்] தடுக்கப்பட்ட விஷயங்கள் போன்றவற்றின் அடிப்படை சட்டதிட்டங்களை காற்றுக்குக் கொடுப்பதும் அவற்றின்படி செயல்படச் செய்வதும் {ஃபர்ளு} கட்டாயக் கடமையாகும் என சட்டவல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.    {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}
عن أَنَس بْن مَالِكٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ(ابن ماجة) عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنهم قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ.(احمد

يُحَدِّثُ  أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة 3661



ஒரு ஹதீஸில் வந்துள்ளது "எந்த மனிதர் தன் குடும்பத்தினர்களுக்கு உங்களின் தொழுகையை நிறைவேற்றுங்கள்! உங்களின் கடமையாக்கப்பட்ட நோன்பை கடைபிடியுங்கள்! உங்கள் செல்வத்தின் மீது கடமையான ஜகாத்தை சரியாக {கணக்கிட்டு} கொடுத்து விடுங்கள்! உங்களில் ஏழைகளுக்கு பொருளுதவி செய்யுங்கள்! இன்னும் உங்களில் அநாதைகளை ஆதரித்து வாருங்கள்! உங்கள் அண்டை வீட்டாரை அனுசரித்து வாழுங்கள்! என அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பிரத்தியேகமாக அருள் புரிவானாக! அதன் மூலம் உங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் ஒன்று சேர்க்க வழியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.   {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}
எச்சரிக்கை:
قال رسول الله صلى الله عليه وسلم : « ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الأعظم الذي على الناس راع وهو مسئول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسئول عن رعيته والمرأة راعية في بيت زوجها وولده وهي مسئولة عن رعيتها وعبد الرجل راع على مال سيده وهو مسئول عنه ألا فكلكم راع وكلكم مسئول عن رعيته »
ஒரு ஹதீஸில் வந்துள்ளது உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பு தாரிகள் நாளை மறுமையில் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்! ஒரு மனிதர் தன் குடும்பத்தினருக்கு பொருப்புதாரியாவார் மறுமையில் அவரின் குடும்பத்தினர் பற்றி {அவர்களின் கடமைகளைச் சரிவர நிறைவேற்றினாரா அவர்களுக்கு மார்க்கஞானத்தைப் போதித்து அல்லாஹ்வை அஞ்சி நடக்கச் செய்தாரா? என} விசாரிக்கப்படுவார்.
மற்றொரு ஹதீஸில் நாளை மறுமையில் மனிதர்களில் அதிகம் வேதனைக்குரியவர் தன் குடும்பத்தினர்க்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்த மறந்தவராவார். என வந்துள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை என்ன என்பதை அறிந்து அவற்றை சரிவர நிறைவேற்றுவதின் மூலமே இறைவனின் பிடியிலிருந்து நீங்களும் தப்பிக்க முடியும், நரக வேதனையிலிருந்து உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க முடியும்.
பின்குறிப்பு: ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் அடிப்படை மார்க்க விளக்கத்தைக் கற்றுக்கொடுப்பது கட்டாய கடமையாகும். படிக்கின்ற காலத்தில் குறைந்தது விடுமுறைக் காலங்களிலாவது அதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கவில்லையானால் அதைவிட துர்ப்பாக்கியம் வேறேதுமில்லை.அல்லாஹ்வின் கிருபையால் இன்று பரவலாக பல இடங்களில் கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் படுகின்றன அவற்றில் நம் பிள்ளைகளை சேர்த்து நரகைவிட்டும் காக்க ஒரு சிறு முயற்சியாவது செய்வோமாக.
அல்லாஹ் நம் முயற்சிகளை பயனுள்ளதாக ஆக்குவானாக ஆமீன்.



மௌலவி,ஹாபிஸ்,அப்சலுல் உலமா.
அ.முஹம்மது ஆதம் ரஷாதி M..A,